கமல், சரத்குமாரை ஒருமையில் கடுமையாக தாக்கி பேசிய ராதாரவி
கமல், சரத்குமாரை ஒருமையில் கடுமையாக தாக்கி பேசிய ராதாரவி
தேர்தல் பிரசாரத்தில் நடிகர் ராதாரவி
பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகர் ராதாரவி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை ஒருமையில் கடுமையாக தாக்கி பேசினார்.
புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து நடிகர் ராதாரவி இன்று பிரசாரம் செய்தார். அப்போது திருக்கனூர் கடை வீதியில் பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகுதான் இந்தி கற்றுக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்தி படித்திருந்தால் ஐஸ்வர்யா கூடவே நடித்து இருப்பேன். இந்தியை கற்றுக் கொள்ளக்கூடாது என்று கூறியது திமுக தான். ஆனால் இன்று அவர்களது குடும்பத்தார் அனைவரும் இன்று இந்தி பேசுகிறார்கள். எழுதுகிறார்கள்.
இந்தி திணிப்பை கண்டித்தும் தூர்தர்சன் பெயரை மாற்ற மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தொலைக்காட்சிப் பெட்டியை உடைக்கும் போராட்டத்திற்கு நாங்கள் எல்லாம் டிவி எடுத்துக்கொண்டு சென்று ரோட்டில் போட்டு உடைத்தோம். ஆனால் கலைஞர் உடைத்த பெட்டியில் இயந்திரம் இல்லை. அந்த அளவுக்கு ஏமாற்றுக்காரர்கள் திமுகவினர் என குற்றம்சாட்டினார்.
மேலும் ராதாரவி பேசுகையில், “நாட்டின் வளர்ச்சியை மட்டுமே பாஜக சிந்திக்கிறது. நாட்டிற்கு தேவையான கட்சியாக பாஜக மாறியிருக்கிறது. இந்த சின்ன ஊரை கூட காங்கிரசால் காப்பாற்ற முடியலை. இந்தியாவை எப்படி காப்பாற்ற முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலை தனது தந்தை எம்.ஆர்.ராதா குரலில் பேசி விமர்சித்த ராதாரவி, இப்போது பல கட்சிகள் வந்துவிட்டன. கமல்ஹாசன் கூட கட்சி ஆரம்பித்து விட்டார். தமிழ் சினிமாவில் முத்தக் காட்சியை அறிமுகப்படுத்திய பெருமை கமல்ஹாசனையே சேரும். எத்தனையோ தயாரிப்பாளர்களை நடக்கவிட்ட கமல்ஹாசன் இன்று கோவை தெற்கு தொகுதியில் வீதி வீதியாக அலைகிறார்.
சரத்குமார் டிடிவி தினகரனிடம் சென்றிருந்தால் கூட ஒன்று, இரண்டு தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கும். கமல் ஒரு நல்ல நடிகர். அவரிடம் இருப்பது கிறிஸ்துவ பணம். அதாவது பதிவில் இந்து பெயரில் கிறிஸ்து” என்று கூறி கமல்ஹாசன் மற்றும் சரத்குமாரை ஒருமையில் தாக்கி பேசினார்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.