Home /News /tamil-nadu /

அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளதா? இல்லையா? என்பதை டெல்லி தலைமைதான் கூற வேண்டும் - ராதாரவி

அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளதா? இல்லையா? என்பதை டெல்லி தலைமைதான் கூற வேண்டும் - ராதாரவி

நடிகர் ராதாரவி

நடிகர் ராதாரவி

பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் என்ன பேசினாலும் அதிமுக பெருந்தன்மையாக பாஜக உடன் தான் கூட்டணி என்று தற்போது வரை கூறி வருகின்றனர் என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளதா, இல்லையா என்பதை டெல்லி தலைமைதான் கூற வேண்டும் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

    காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராதாரவி, முதல்வர் வேட்பாளர் குறித்து பேசும் குஷ்பு போன்றவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள். பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் என்ன பேசினாலும் அதிமுக பெருந்தன்மையாக பாஜக உடன் தான் கூட்டணி என்று தற்போது வரை கூறி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

    மேலும், தமிழ்நாட்டை கருணாநிதி அடகு வைத்துவிட்டார் போல. அதனால்தான் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை மீட்போம் என்று கூறி வருகிறார் என்றும் ராதாரவி தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய ராதாரவி, அதிமுக கட்சியை குறை கூறுவதற்கு திமுகவிற்கு அருகதை இல்லை. ஏனென்றால் ஊழலின் சாம்ராஜ்யம் திமுக தான் என்றும் தெரிவித்தார்.

    Also read... தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? பதிலளிக்க மறுத்த பிரகாஷ் ஜவடேகர்

    மேலும், வேளாண் சட்டதிருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் 75% பேர் புரோக்கர்கள் தான் என்றும் விவசாயிகளின் போராட்டத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் தூண்டுதல் உள்ளது என்றும் ராதாரவி குற்றம்சாட்டினார்.

    திமுகவில் 30 வருடங்களுக்கு மேலாக முட்டாளாக இருந்து விட்டேன். தற்போதுதான் புத்தி வந்துள்ளது என்று தெரிவித்த ராதாரவி நேரத்திற்குத் தகுந்தாற்போல் சீமான் பேசுகிறார் என்றும் தெரிவித்தார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Radharavi

    அடுத்த செய்தி