• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'எதிர்க்கட்சிகளால் குறை சொல்ல முடியாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது' : நடிகர் பார்த்திபன்

'எதிர்க்கட்சிகளால் குறை சொல்ல முடியாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது' : நடிகர் பார்த்திபன்

''திமுக ஆட்சியை மக்கள் பாராட்டி வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.'' என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

  • Share this:
    எதிர்க்கட்சிகளால் குறை சொல்ல முடியாத அளவுக்கு தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
    தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளால் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியை மக்கள் பாராட்டி வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒத்த செருப்பை தொடர்ந்து இரவின் நிழல் என்ற படத்தை உருவாக்கி வருகிறேன். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும்.
    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இயக்குநர் பார்த்திபன் எழுதி, இயக்கி, ஒரே ஆளாக நடித்திருந்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. ஒரு நபரே எழுதி, இயக்கி, நடித்து தயாரித்ததற்காக இந்த படம் ஆசிய சாதனைகள் புத்தகத்திலும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளையும் வென்றது. 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழாவில் சிறப்பு விருதையும் (ஸ்பெஷல் ஜூரி), சிறந்த ஒலிப்பதிவுக்கான (ரசூல் பூக்குட்டி) விருதையும் தட்டிச் சென்றுள்ளது. இந்த விருதை முதலமைச்சர் ஸ்டாலினிம் சமீபத்தில் காட்டி பார்த்திபன் வாழ்த்து பெற்றிருந்தார்.

     



    பார்த்திபன் தற்போது இரவின் நிழல் என்ற படத்தை பார்த்திபன் உருவாக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: