முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிரசாரத்தின்போது மயங்கிய மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

பிரசாரத்தின்போது மயங்கிய மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள நடிகர் மன்சூர் அலிகான் திடீரென மயக்கம் அடைந்ததால், உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Last Updated :

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான், பிரச்சாரத்தின்போது மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வரும் 18-ஆம் தேதி தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர், மக்களைக் கவரும் வகையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நிலக்கோட்டைத் தொகுதியில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அழகம்பட்டியில் பிரச்சாரம் செய்த போது மன்சூர் அலிகானுக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.

உடனே கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரை நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Also see...தேர்தல் 40-40: சிவகங்கை தொகுதி ஒரு சிறப்பு பார்வை 

Also See.... பா.ஜ.க கூட்டணியின் பலம்... பலவீனம்...? ஒரு பார்வை

Also Read... 


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Actor Mansoor ali khan, Dindugal, Election 2019, Election Campaign, Lok Sabha Election 2019, Naam Tamilar katchi, Tamil Nadu Lok Sabha Elections 2019