பா.ஜ.க வின் A முதல் Z வரை அனைத்து டீமும் கமல் கட்சிதான் - மன்சூர் அலிகான்

பா.ஜ.க வின் A முதல் Z வரை அனைத்து டீமும் கமல் கட்சிதான் - மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

கமல் பின்னால் பாஜக இருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழ்தேச புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். பேரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் அரசனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்த மன்சூர் அலிகான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய மன்சூர் அலிகான், “இந்த தொகுதியில் வேலை கேட்டு வந்திருக்கிறேன். இந்த தொகுதியில் மிகப்பெரிய பணமுதலைகள், ராட்சச பெருச்சாலிகள் ஆண்டு கொண்டு இருப்பவர்கள் போட்டியிடுகின்றனர். அதிமுகவில் அமைச்சர் வேலுமணி 15 வருடங்கள் எம்.எல்.வாக இருந்து விட்டார். நான் வேலைகேட்டு வந்து இருக்கின்றேன்.

    தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் பண்பிற்காகவே இந்த தொகுதியில் போட்டியிடுகின்றேன். தென்னந்தோப்பு, வாழை எல்லாம் இருப்பதால் , பனை,பாக்கு மரம் இருப்பதால் இயற்கை விவசாயத்தை ஊக்கு விக்க இந்த தொகுதியில் நிற்கின்றேன். தெற்கு தொகுதியில் போட்டியிடலாம் என நினைத்தேன் கமல் அங்கு போட்டியிடுவதால் அவருக்காக விட்டுக்கொடுத்து விட்டு தொண்டாமுத்தூர் தொகுதிக்கு வந்துவிட்டேன்.

    நான் கமலுடைய மிகப்பெரிய ரசிகர். ஆனால் அரசியலில் கமல் என்னுடைய சிஷ்யனாக இருக்கிறார். திண்டுக்கல்லில் நான் போட்டியிட்ட போது செய்ததைத் தான் தற்போது கோவை தெற்கு தொகுதியில் அவர் செய்கிறார்.இந்த தொகுதி மக்களின் கோரிக்கையை ஒரு வருடத்தில் செய்து கொடுக்காவிட்டால் உடனே ராஜினாமா செய்வேன்.



    நான் தனிப்புலி் எனக்கு முன்னாடியும் பின்னாடியும் யாரும் இல்லை.தொண்டனே தலைவன், தலைவனே தொண்டன். கமல்ஹாசன் கால்சீட் கொடுக்காமல் இங்கே வந்து வாக்கிங் போய்க் கொண்டிருக்கிறார். மக்கள் போராட்டத்திற்கு எதில் அவர் தலைமை தாங்கி இருக்கிறார். கவர்ச்சி அரசியலை வைத்து என்னை முதல்வராக்குங்கள் என்பது முட்டாள்தனம். கமல் பின்னால் இருப்பது யாரு? பா.ஜ.க வின் A முதல் Z வரை அனைத்து டீமும் கமல் கட்சிதான்.” இவ்வாறு மன்சூர் அலிகான் தெரிவித்தார்.

    செய்தியாளர் : குருசாமி

    கோவை
    Published by:Sheik Hanifah
    First published: