Home /News /tamil-nadu /

உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? - ராகுல் காந்திக்கு நடிகை குஷ்பு கேள்வி!

உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? - ராகுல் காந்திக்கு நடிகை குஷ்பு கேள்வி!

ராகுல் காந்தி, குஷ்பு

ராகுல் காந்தி, குஷ்பு

ராகுலுக்கு பிரதமர் ஆகும் தகுதி இல்லை எனவும் அதற்கு மக்கள் ஒருபோது வார்ப்பளிக்க போவதில்லை எனவும் கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    காங்கிரஸ் கட்சி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையால் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் எனவும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் நடைபயணத்தை கடந்த புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கினார். ராகுல் காந்தியின் பாத யாத்திரையை பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் குஷ்பு கேலி செய்துள்ளார்.

    கரை சேர்க்க முடியாத காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி கரை சேர்க்க முயற்சிக்கிறார் என பேசிய நடிகை குஷ்பு, செல்லும் இடங்களில் எல்லாம், தேச விரோதமாகவும் மத துவேஷமாகவும் பேசுபவர்களிடம் மட்டுமே ராகுல் காந்தி பயணிப்பதாக குற்றம்சாட்டினார். இதனால் மக்களிடம் கூடுதல் அதிருப்தி தான் ஏற்படும் என குஷ்பு தெரிவித்தார்.

    “காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை. நான் காங்கிரஸில் இருந்த போது ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார். அப்போது நான் உட்பட பலரும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பெயரை சொன்னோம். எல்லோரும் என் மீது கடிந்துக் கொண்டனர்.” என கூறினார்.

    ராகுல் தான் பதிவியில் இருக்க மாட்டேன் என்பார். பின்னர் பலரும் அவரிடம் போய் கெஞ்சி தலைவர் பதவிக்கு அழைத்து வர வேண்டும். அது போன்ற நாடகத்தை அவர் நடத்துவார் என கூறினார். இதனால் காங்கிரஸ் மீது மக்களும் கட்சியினரும் நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறினார். ராகுலுக்கு பிரதமர் ஆகும் தகுதி இல்லை எனவும் அதற்கு மக்கள் ஒருபோது வார்ப்பளிக்க போவதில்லை எனவும் கூறினார்.

    இதையும் வாசிக்க: நீட் தேர்வு இருக்கும் வரை மாணவர்களை தயார்ப்படுத்தி தான் ஆக வேண்டும் - அமைச்சர் பொன்முடி பேச்சு

    கர்நாடகாவில் ஊழல்வாதியான டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையை அரசியல் பழிவாங்கல் என கூறுகின்றனர். அப்படியென்றால் காங்கிரஸ் ஆட்சியில் ஜெகன்மோகன் மீது விசாரணை நடத்தப்பட்டது காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலின் பெயரில் நடைபெற்றதா என கேள்வி எழுப்பினார். உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? எனவும் கேட்டார்.

    மேலும் அடுத்த தேர்தலிலும் பாஜக தான் வெற்றி பெறும் எனவும் மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் எனவும் அவர்  நம்பிக்கை தெரிவித்தார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Congress, Kushboo, Rahul gandhi

    அடுத்த செய்தி