Home /News /tamil-nadu /

ரஜினி எந்தக் கட்சியுடனும் இணைய மாட்டார்: எம்.எல்.ஏ. கருணாஸ்

ரஜினி எந்தக் கட்சியுடனும் இணைய மாட்டார்: எம்.எல்.ஏ. கருணாஸ்

ரஜினி மற்றும் கருணாஸ்

ரஜினி மற்றும் கருணாஸ்

முக்குலத்தோர் புலிபடைக்கு உரிய அங்கீகாரம் அளித்தால் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற தயார் என்றும் கருணாஸ் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
    நடிகர் ரஜினிகாந்த் தனியாகத்தான் கட்சி தொடங்குவார், எந்தக் கட்சியுடனும் அவர் இணைய மாட்டார் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு வந்த கருணாஸ் முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முக்குலத்தோர் புலிபடை சார்பாக, 112-வது தேவர் குரு பூஜை ஜெயிந்தி விழாவை முன்னிட்டு தமிழக முதலமைச்சர், துணைமுதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களை அழைத்துள்ளதாகவும், இதற்கு அனைவரும் வருகிறோம் என்று முதல்வர் உறுதியளித்ததாகவும் கருணாஸ் தெரிவித்தார்.

    மேலும் ரஜினி தனியாக மட்டுமே கட்சி தொடங்குவர் என்றும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டார் எனவும் கூறினார்.

    மேலும் தான் இன்று வரை சசிகலாவின் விசுவாசி தான் எனக் கூறிய அவர் , சிறையில் உள்ள அவர் மீது மேலும் அன்னிய செலவாணி வழக்கை சுமத்தி தண்டிக்க பார்க்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.

    மேலும் முக்குலத்தோர் புலிபடைக்கு உரிய அங்கீகாரம் அளித்தால் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற தயார் என்றும் கருணாஸ் தெரிவித்தார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Karunas

    அடுத்த செய்தி