ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நடிகர் கருணாஸ் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

நடிகர் கருணாஸ் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

நடிகர் கருணாஸ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

நடிகர் கருணாஸ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

பசும்பொன்னில் கருணாஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டை காவல்துறை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram, India

  ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

  இந்த நிகழ்வில் வருடம் தோறும் முதலமைச்சர் தொடங்கி முன்னணி அரசியல் பிரமுகர்கள், சமுதாய மக்கள் கலந்துகொள்வது வழக்கம். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் சுமார் 10,000 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக இந்தாண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பசும்பொன் செல்லாத நிலையில், திமுக இளைஞர் அணித் தலைவரும், சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி இன்று பசும்பொன் செல்கிறார்.

  இந்த சூழலில் அங்கு அரசியல் கட்சியினர் சார்பில் சுவரொட்டிகள், பதாகைகள், கொடிக்கம்பங்களை வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு திருவாடானை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி நிறுவனருமான கருணாஸ் தேவர் ஜெயந்தி விழாவில் அன்னதான பந்தல் அமைத்துள்ளார். அந்த இடத்தில் முத்துராமலிங்கத் தேவர் மதுரை விமான நிலையம் என்று பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றும் வைத்துள்ளார். இந்த கட் அவுட்டை போலீசார் அங்கிருந்து அகற்றினர்.

  இதையும் படிங்க: அவதூறு பரப்பும் பாஜக மாநில தலைவர் - அண்ணாமலை மீது புகார்களை அடுக்கிய காவல்துறை!

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாஸ் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.சிலரின் துண்டுதலின் பேரில் தான் காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, இந்த செயலை கண்டித்து தான் பசும்பொன்னில் கட் அவுட் இருந்த அதே இடத்தில்  சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கவுள்ளேன் என அவர் அறிவித்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Actor karunas, Fasting Protest, Muthuramalinga Thevar