பெரியார் சொன்னவற்றை நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி- நடிகர் கார்த்தி

news18
Updated: August 10, 2018, 5:00 PM IST
பெரியார் சொன்னவற்றை நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி- நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி
news18
Updated: August 10, 2018, 5:00 PM IST
பெரியார் சொன்னவற்றை எல்லாம் தனது ஆட்சியில் நடைமுறைப்படுத்தியவர்  கருணாநிதி என்று நடிகர் கார்த்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 28ம் தேதி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் கடந்த 7ம் தேதி மாலை உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

அடக்கம் செய்யப்பட்ட கருணாநிதியின் உடலுக்கு தொடர்ந்து 3 வது நாளாக திமுக தொண்டர்களும் பொது மக்களும், பிரபலங்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் கார்த்திக் மெரினாவுக்கு வந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் பேசுகையில், பெரியார் சொன்னவற்றை எல்லாம் ஆட்சியை அமைத்து செய்து காட்டியவர் கருணாநிதி. சிறிய கிராமங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் நினைவிடத்துக்கு வந்து கொண்டே இருப்பது அவரது சாதனையை காட்டுகிறது. இங்கு வரும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் கருணாநிதியால் பலன் அடைந்திருப்பவராக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல சமூக சீர்திருத்தங்களை செய்தவர் அவர். கருணாநிதியின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...