ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கமல்ஹாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

கமல்ஹாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

Kamal Haasan: கடந்த ஞாயிறன்று ஐதராபாத் சென்ற கமல்ஹாசன், மூத்த இயக்குநர் கே.விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

  இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் இரண்டாம் பாகத்தில் கமல் நடித்து வருகிறார். கடந்த ஞாயிறன்று ஐதராபாத் சென்ற கமல்ஹாசன், மூத்த இயக்குநர் கே.விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். மீண்டும் சென்னைக்கு திரும்பிய நிலையில், உடல்சோர்வாக இருப்பதாக கூறியுள்ளார்.

  இதனை அடுத்து, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் கமல்ஹாசன், இன்று மாலை வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது மருத்துமனையின் அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Kamalhaasan