நடிகர் ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்!

அந்த நேரத்தில் கதாநாயகன், பெண் சிங்கம் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். தி.மு.கவில் இருந்த ஜே.கே.ரித்திஷ் அழகிரியின் ஆதரவாளராக செயல்பட்டுவந்தார்.

news18
Updated: April 13, 2019, 7:47 PM IST
நடிகர் ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்!
நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்.
news18
Updated: April 13, 2019, 7:47 PM IST
நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

தி.மு.கவின் ராமநாதபுர மாவட்டச் செயலாளராக இருந்த சுப.தங்கவேலனின் பேரன் ஜே.கே.ரித்திஷ். 2009-ம் ஆண்டு தி.மு.க சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் மூலம், 2009-2014-ம் ஆண்டு காலகட்டத்தில் தி.மு.கவின் எம்.பியாக செயல்பட்டுவந்தார். அந்த நேரத்தில் கதாநாயகன், பெண் சிங்கம் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். தி.மு.கவில் இருந்த ஜே.கே.ரித்திஷ் அழகிரியின் ஆதரவாளராக செயல்பட்டுவந்தார். பின்னர், தி.மு.கவிலிருந்து விலகிய ஜே.கே.ரித்திஷ், 2014-ம் ஆண்டில் அ.தி.மு.கவில் இணைந்தார். சமீபத்தில், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற எல்.கே.ஜி. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விஷால் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்: தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு

அரசியல் மட்டுமல்லாது, திரைத்துறை வட்டாரத்திலும் முக்கிய பிரமுகராக செயல்பட்டுவந்தார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க விவகாரங்களில் தீவிரமாக செயல்பட்டுவந்தார். சமீபத்தில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போடப்பட்ட விவகாரத்தில், விஷால் அணிக்கு எதிரணியில் முக்கிய நபராக ஜே.கே.ரித்திஷ் செயல்பட்டார்.

Loading...

இந்தநிலையில், ராமநாதபுரத்தில் ஜே.கே.ரித்திஷ்  மாரடைப்பால் திடீரென்று உயிரிழந்தார்.

விஷாலுக்கு எதிராக கலகம் செய்த ஜே.கே ரித்திஷ்.... வீடியோ பார்க்க...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...