ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புதிய சாதனை படைக்குமா நடிகர் அஜித்தின் வலிமை டிரைலர்

புதிய சாதனை படைக்குமா நடிகர் அஜித்தின் வலிமை டிரைலர்

Valimai Trailer | ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த வலிமை படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான ஜீ ஸ்டியோஸ் அறிவித்துள்ளது.

 • 1 minute read
 • Last Updated :

  நடிகர் அஜித் ரசிகர்கள் நீண்ட காத்திருப்புக்கு பெரிய விருந்தாக இன்று மாலை 6.30 மணிக்கு டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

  தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. முன்னதாக ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. வலிமை படத்தின் அம்மா சென்டிமென்ட் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

  இதனிடையே ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த வலிமை படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான ஜீ ஸ்டியோஸ் அறிவித்துள்ளது.

  சமூக வலைதளங்களில் விஜய் - அஜித் ரசிகர்களின் போட்டி எப்போதும் அதிகமாக இருக்கும். இதற்கு முன் விஜய் நடித்த மாஸ்டர் டிரைலர் பல சாதனைகளை படைத்தது. அதனை வலிமை டிரைலர் இன்று முறியடிக்குமா என்று பலத்த எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

  First published: