நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நந்தினியின் சகோதரி கைது!

நீதிமன்றத்தை பலரும் தரக்குறைவாக விமர்சித்துவரும் நிலையில் அவர்கள் மீதெல்லாம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? தற்போது நந்தினி கேள்வி கேட்டதற்காக கைது செய்தது நியாயமா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

news18
Updated: July 8, 2019, 9:54 AM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நந்தினியின் சகோதரி கைது!
நந்தினி மற்றும் அவரது தந்தை
news18
Updated: July 8, 2019, 9:54 AM IST
நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நந்தினியை விடுவிக்கக்கோரி இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்த அவரது சகோதரி நிரஞ்சனா கைது செய்யப்பட்டுள்ளார்.

டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தவர் வழக்கறிஞர் நந்தினி. கல்லூரிக்காலத்தில் இருந்தே தனது போராட்டத்தை பல வடிவங்களில் நடத்தி தற்போதும் பொதுப்பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.




இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கறிஞா் நந்தினிக்கு ஜூலை 5ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் தற்போது வரை சிறையில் இருக்கிறார்.

நீதிமன்றத்தை பலரும் தரக்குறைவாக விமர்சித்துவரும் நிலையில் அவர்கள் மீதெல்லாம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? தற்போது நந்தினி கேள்வி கேட்டதற்காக கைது செய்தது நியாயமா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், தனது சகோதரி மற்றும் தந்தையை விடுவிக்க வேண்டும் என்று நந்தினியின் தங்கையும் மதுரை சட்டக்கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா, இன்று கல்லூரி முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

போராட்டத்திற்கு அவர் தயாராகி கொண்டிருந்த போது வீட்டிற்கு வந்த போலீசார், நிரஞ்சனாவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

வழக்கறிஞர் நந்தினி கைது...! இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் #ReleaseNandhini ஹேஷ்டேக்
First published: July 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...