முகிலனை பார்க்க அவரது மனைவி பூங்கொடி வந்த கார் விபத்தில் சிக்கியது!

முகிலனை நேற்றிரவு ஆந்திர போலீசார் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

news18
Updated: July 7, 2019, 9:45 AM IST
முகிலனை பார்க்க அவரது மனைவி பூங்கொடி வந்த கார் விபத்தில் சிக்கியது!
முகிலனின் மனைவி பூங்கொடி
news18
Updated: July 7, 2019, 9:45 AM IST
திருப்பதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட முகிலன், சென்னைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவரை பார்க்க சென்னை வந்துகொண்டிருந்த மனைவி பூங்கொடி வந்த கார் கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் சிக்கியது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 4 மாதங்கள் ஆகிய நிலையில், அவரை கண்டுபிடிக்க நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், முகிலனை விரைவில் கண்டுபிடிப்போம் என்று கடந்த முறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் போலீசார் கூறியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை ஆந்திர போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி ஒன்று வெளியானது.

ராஜமுந்திரிக்கு சென்ற முகிலனின் நண்பர் ஒருவர் முகிலனைப் பார்த்து தமிழக போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதனை அடுத்து, முகிலனை நேற்றிரவு ஆந்திர போலீசார் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். முகிலன் காட்பாடிக்கு அழைத்து வரப்பட்டு அங்கு போலீசாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டார்.

இன்று அவர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட உள்ளார்.

இந்த நிலையில், முகிலனை பார்க்க ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து அவரது மனைவி பூங்கொடி சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

அவர் வந்த கார் கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் சிக்கியது. இதில், லேசான காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூங்கொடி உடன் வந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்.

டயர் வெடித்ததில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவற்றில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

First published: July 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...