’ஒரு கும்பல் என்னை கடத்திச் சென்று கொடுமைப்படுத்தியது’ - முகிலன் வீடியோ வாக்குமூலம்!

Web Desk | news18
Updated: July 7, 2019, 3:58 PM IST
’ஒரு கும்பல் என்னை கடத்திச் சென்று கொடுமைப்படுத்தியது’ - முகிலன் வீடியோ வாக்குமூலம்!
சமூக செயற்பாட்டாளர் முகிலன்
Web Desk | news18
Updated: July 7, 2019, 3:58 PM IST
தன்னை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொடுமைப்படுத்தியாக முகிலன் வாக்குமூலம்
அளித்துள்ளார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 4 மாதங்கள் ஆகிய நிலையில், அவரை கண்டுபிடிக்க நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், முகிலனை விரைவில் கண்டுபிடிப்போம் என்று கடந்த முறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் போலீசார் கூறியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை ஆந்திர போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி ஒன்று வெளியானது.

ராஜமுந்திரிக்கு சென்ற முகிலனின் நண்பர் ஒருவர் முகிலனைப் பார்த்து தமிழக போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதனை அடுத்து, முகிலனை நேற்றிரவு ஆந்திர போலீசார் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். முகிலன் காட்பாடிக்கு அழைத்து வரப்பட்டு அங்கு போலீசாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டார்.

ரயில்வே போலீசார் முகிலனை  சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அவரை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்,
கடந்த 140 நாட்களாக முகிலன் எங்கே இருந்தார், எப்படி வாழ்ந்தார், யார் யாரை சந்தித்தார், என்பது உள்ளிட்ட விவரங்களை வீடியோ பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஆட்கொணர்வு மனு மீதான சட்ட ரீதியான நடவடிக்கைகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனையில் முகிலன் தன்னை கணுக்காலில் நாய் கடித்ததாக தெரிவித்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் சர்க்கரை நோய் அதிகரித்து இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி ஷங்கர் மற்றும் எஸ்.பி. மல்லிகா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையின் போது, தன்னை ஒரு கும்பல் கடத்தி சென்று கொடுமைப்படுத்தியாகவும், பல மாநிலங்களில் சுற்றி திரிந்தாகவும் முகிலன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீடியோ பார்க்க: மாயமானது முதல் திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டது வரை... என்ன நடந்தது முகிலனுக்கு?

First published: July 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...