#Breaking| பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார் முகிலன்

news18
Updated: July 7, 2019, 6:15 PM IST
#Breaking| பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார் முகிலன்
சமூக செயற்பாட்டாளர் முகிலன்
news18
Updated: July 7, 2019, 6:15 PM IST
சமூக செயற்பாட்டாளர் முகிலனை சிபிசிஐடி போலீசார் பாலியல் வழக்கில் கைது செய்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் முகிலன் திடீரென மாயமானார். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் முகிலனை கண்டறிய காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர். தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி, இது தொடர்பாக எழும்பூர் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார் முகிலனை கண்டறிய ரயில் நிலையங்களில் நோட்டீஸ் ஒட்டி பொதுமக்கள் உதவியை கோரினர். இதையடுத்து 140 நாட்கள் கழித்து நேற்று ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை ரயில்வே காவல்துறையினர் அழைத்து செல்வதை கண்ட அவரது நண்பர் சண்முகம் முகிலனின் மனைவி பூங்கொடிக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை கொண்டுவரப்பட்ட முகிலனை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். முன்னதாக முகிலனுடன் போராட்டங்களில் ஈடுபட்ட 37 வயதுடைய பெண்மணி ஒருவர் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குளித்தலை போலீசில் புகாரளித்திருந்தார். இந்த வழக்கும் தற்போது சிபிசிஐடி வசம் உள்ள நிலையில் அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர் . இன்னும் சற்று நேரத்தில் அவரை  சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

 



வீடியோ பார்க்க: மாயமானது முதல் திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டது வரை... என்ன நடந்தது முகிலனுக்கு?

First published: July 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...