• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சட்ட ஆலோசனையை பொறுத்து எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை - சென்னை காவல்துறை ஆணையர்

சட்ட ஆலோசனையை பொறுத்து எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை - சென்னை காவல்துறை ஆணையர்

மகேஷ் குமார் அகர்வால்

மகேஷ் குமார் அகர்வால்

சட்ட ஆலோசனையைப் பொறுத்து எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னை புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்காக ஆவின் பார்லரை இன்று மாலை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர்
சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் விடுதிகள் மற்றும் வாகன சோதனை சாவடி அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார். மேலும், முதல்வர் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி எஸ்.வி சேகர் மீது புகார் வந்துள்ளதாவும் சட்ட ஆலோசனைக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் அதன் அறிக்கையின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Also read: சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற எஸ்.வி.சேகரின் ஆசையை அரசு நிறைவேற்றும் - அமைச்சர் ஜெயக்குமார்

பின்னர் சைபர் குற்றங்களைத் தடுக்கும் விதமாக காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் சுதந்திர தின விழாவையொட்டி போதுமாக பாதுகாப்பு போடபட்டுள்ளதாகவும் தனிமனித இடைவெளியைக் கட்டுபடுத்தும் விதமாக குறைந்த அளவிலான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொடியேற்றும் விழாவை வீட்டிலிருந்தபடியே பார்க்கும் வசதியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: