முழு கல்விக் கட்டணத்தை செலுத்தச் சொல்லி வற்புறுத்தினால் நடவடிக்கை - மெட்ரிக் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
முழு கல்விக் கட்டணத்தை செலுத்தச் சொல்லி வற்புறுத்தினால் நடவடிக்கை - மெட்ரிக் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
கோப்புப் படம்
நூறு சதவீத கல்வி கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கொரோனோ காலத்தில் முழு கல்வி கட்டணம் செலுத்த சொல்லி பெற்றோர்களை நிர்பந்திக்க கூடாது என்று நீதிமன்ற உத்தரவிட்டுள்ள நிலையில் சில தனியார் பள்ளிகள் முழு கல்வி கட்டணத்தை செலுத்த சொல்லி பெற்றோர்களை நிர்பந்தம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது அதில் முழு கல்வி கட்டணத்தை செலுத்த சொல்லி நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது வாய் மூலமாகவோ அல்லது எழுத்து பூர்வமாக பெற்றோர்கள் தரப்பில் புகார் செய்யப் பட்டால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Also read... பள்ளிகள் & கல்லூரிகளை திறப்பது குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு என்ன? தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில்
ஏற்கனவே நீதிமன்றம் மூன்று தவணைகளாக பள்ளி கட்டணத்தை பள்ளிகள் வசூலித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி சில தனியார் பள்ளிகள் செயல்படுவதை அடுத்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.