மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் அருகே தேவைக்கு ஏற்ப ரயிலை நிறுத்தி செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தென்னக இரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் அருகே ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என ரயில்வேத்துறைக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம் எழுதியிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கு பதிலளித்த தென்னக ரயில்வே மூத்த போக்குவரத்து மேலாளர் பரத்குமார், "மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டிய கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடமானது திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
இந்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தூரம் ஆனது 10 கிலோ மீட்டர் ஆகும், மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடம் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இருந்து 4.5 கிலோ மீட்டர் ஆகும்.
தற்போது, இதில் கூடுதல் ரயில் நிலையம் வழங்குவதற்கான தேவையில்லை, இருப்பினும் இரயில்கள் நின்று செல்ல நிறுத்தத்திற்கான முன்மொழிவு தேவைகளின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும்" என தெரிவித்துள்ளதாக ரவிக்குமார் எம்.பி கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aiims Madurai, Southern railway