கரூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

அமைச்சர் செந்தில் பாலாஜி

ஜவுளி ஏற்றுமதியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான சாயப்பூங்கா பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது' கடந்த கால ஆட்சியில் இப்பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

  • Share this:
    கரூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கரூரில் தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில் பேசிய  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூரில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில்  சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் முதல்வராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    Also read: நியாய விலைக் கடைகளில் பணியாளர்களை தவிர வெளிநபர்கள் இருந்தால் கைது நடவடிக்கை; தமிழக அரசு அதிரடி

    கரூர் மாவட்டத்தில் கொசுவலை உற்பத்தி, பேருந்து கூடு கட்டும் தொழில், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சிறந்து விளங்கி வருகிறது. ஜவுளி ஏற்றுமதியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான சாயப்பூங்கா பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது' கடந்த கால ஆட்சியில் இப்பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரச்சனைக்கு அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. விரைவில் கரூரில் சாயப்பூங்கா அமைக்கப்படும்.

    கரூர் ஜவுளி ஏற்றுமதி தொழில் வளர்ச்சி அடைய வெளிநாட்டு ஏற்றுமதி முகவர்கள் (பையர்கள்) அதிக அளவில் வரவேண்டும். கரூரில் விமான வசதி இல்லாததால் பையர் வரவு குறைவாக உள்ளது.

    எனவே, முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி கரூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    திமுக ஆட்சியில் தமிழகம் 100 சதவீத வளர்ச்சி பெற்ற மாநிலமாக திகழும் என்பதில் மாற்றம் இல்லை என்று அவர் கூறினார்.

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன்
    Published by:Esakki Raja
    First published: