ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆண்டுதோறும் மாணவர்களை பாலியல் வன்முறைகளில் இருந்து தடுக்கும் வாரம் கடைப்பிடிக்க நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை

ஆண்டுதோறும் மாணவர்களை பாலியல் வன்முறைகளில் இருந்து தடுக்கும் வாரம் கடைப்பிடிக்க நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மாணவர்களின் பாதுகாப்பை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும் "மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு" அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பள்ளிகளில் ஆண்டுதோறும் நவம்பர் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை மாணவர்களை பாலியல் வன்முறைகளில் இருந்து தடுக்கும் வாரம் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதோடு, மாணவர்களின் பாதுகாப்பை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும் "மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு" அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read: திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி, “கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி” என பெயர் மாற்றப்படும் - க.பொன்முடி

மேலும், மாணவர்களிடம் இருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் புகார்களை பெற கட்டணமில்லா தொலை பேசி எண் மற்றும் மின்னஞ்சல் வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை பள்ளிக்கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக்கப்படும் எனவும், அனைத்து தரப்பினரிடமும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் கையேடு ஒன்று தயாரித்து வழங்கப்படும், சுய மதிப்பீட்டுக் கட்டகம் ஒன்றும் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் புகார் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படுவதோடு, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளில் இருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Department of School Education, Sexual harassment