ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

செருப்பு தைக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான், என்னை மத்திய அமைச்சராக்கியது பாஜக: எல்.முருகன் உருக்கம்

செருப்பு தைக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான், என்னை மத்திய அமைச்சராக்கியது பாஜக: எல்.முருகன் உருக்கம்

தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் மட்டுமே, ராணுவத் தளவாட உதிரிபாக தொழில் வழித்தடம் தொடங்க மத்திய அரசு அனுமதி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆசி யாத்திரை எனும் பெயரில் அவர் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின், நிறைவு விழா சேலத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், பிரதமரின் நலத்திட்டங்களால் பயனடைந்தோரை, நேரில் சந்திக்கும் வகையிலான 3 நாள் யாத்திரை வெற்றிகரமாக நிறைவடைந்தது என்றார். மத்திய அரசின் ஏழு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மூலம், தமிழகம் பலனடைந்து உள்ளதாக குறிப்பிட்டார்.

Also Read : சுமார் 7 லட்சம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் - ரிஜெக்ட் எத்தனை தெரியமா?

தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் மட்டுமே, ராணுவத் தளவாட உதிரிபாக தொழில் வழித்தடம் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பேசினார். இதன் மூலம், சென்னை, கோவை, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருகும் எனவும் எல்.முருகன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான விவரங்கள், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இல்லை என்றார். மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவே திமுக தலைமையிலான அரசு இருப்பதாகவும் எல்.முருகன் விமர்சித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: BJP, L Murugan