ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாணவர்கள் அத்துமீறினால் பேருந்தை நிறுத்தி போலீஸை வரவழைக்கவும் - ஓட்டுநர்களுக்கு உத்தரவு

மாணவர்கள் அத்துமீறினால் பேருந்தை நிறுத்தி போலீஸை வரவழைக்கவும் - ஓட்டுநர்களுக்கு உத்தரவு

பேருந்தில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்

பேருந்தில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்

பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்திணை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பொறுப்பு என அரசு போக்குவரத்து கழகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் அரசு பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. படிக்கட்டில் தொங்கியபடி கால்களை சாலையில் உரசி சாகசம் செய்வது உட்பட பல்வேறு செயல்களில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இந்தச் சம்பவங்களால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. 

  இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  “மாநகர  பேருந்துகளில் பள்ளி மற்று கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யாதவாறு பேருந்துகளில் ஏறும் போதும் பயணம் செய்யும் போதும் பாதுகாப்பான விதிமுறைகளை கடைபிடிக்க செய்ய பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

  வழித்தடங்களில் ஏதேனும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ அந்த பேருந்தை நிறுத்தி படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

  மாணவர்கள் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அறிவுரையை கேட்காமல் மீறி செயல்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பேருந்து இயக்கத்தை போக்குவரத்து இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல்துறை அவசர அழைப்பு 100 எண்ணுக்கோ மற்றும் மாநகர போக்குவரத்து கழகத்துக்கோ தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும்.

  பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்திணை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பொறுப்பு என்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

  Also see... ஆசைவார்த்தை கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது

  மாணவர்களின் படிக்கட்டு பயணங்களை தவிர்க்க போலீஸாரும், போக்குவரத்து துறையும் பல்வேறு அறிவுரைகள் வழங்கியும் படிக்கட்டு பயணம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Bus, Public Transport, School student