முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால்.. அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு

10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால்.. அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு

அரசுப் பேருந்து

அரசுப் பேருந்து

10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அரசு நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

10 ரூபாய் நாணயங்கள் மத்திய ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் புழகத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து 20 ரூபாய் நாணயமும் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், 10 ரூபாய் தாள் அளவுக்கு 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. தமிழகத்தை பொருத்தவரை சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை பரவலாக யாரும் வாங்குவதில்லை.

10 ரூபாய் நாணயம் செல்லாது என அவ்வப்போது வதந்திகளும் பரவுவது. பின்னர், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்கும். 10 ரூபாய் நாணயம் செல்லும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அவ்வபோது நூதன சம்பவங்களும் நடப்பதுண்டு. ஆனாலும், 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதற்கான தயக்கம் இருந்துகொண்டே தான் உள்ளது.

Also Read : கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான் திமுக அரசின் தாரக மந்திரம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

top videos

    இந்நிலையில் போக்குவரத்து கழகம் சார்பில் நடத்துனர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அதில், அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் 10, 20 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்று பயணச் சீட்டைநடத்துனர்கள் வழங்க வேண்டும். நாணயங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    First published: