ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை வேண்டும்.. ஆளுநர் மாளிகை அனுப்பிய புகார்.. !

திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை வேண்டும்.. ஆளுநர் மாளிகை அனுப்பிய புகார்.. !

ஆளுநர்

ஆளுநர்

ஆளுநர் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக திமுக பேச்சாளர் மீது ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சமீபத்தில் விருகம்பாக்கத்தில் நடந்த பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். அவர் பேசும்போது, “தனது உரையில் அம்பேத்கர் பெயரை படிக்க மறுத்த ஆளுநரை அடிக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறதா? இல்லையா?. அம்பேத்கர் பெயரை உச்சரிக்காத நீங்கள் காஷ்மீர் செல்லுங்கள். நாங்களே தீவிரவாதியை அனுப்புகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.இந்த நிலையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில்,  “இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124ன் கீழ் குடியரசு தலைவரையோ, ஒரு மாநிலத்தின் ஆளுநரையோ அவரது பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் செயல்படுதல் என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: DMK, RN Ravi