Home /News /tamil-nadu /

நிலக்கரி மாயமான விவகாரத்தில் நடவடிக்கை உறுதி - அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

நிலக்கரி மாயமான விவகாரத்தில் நடவடிக்கை உறுதி - அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு குறைந்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தங்கமணி யாரையேனும் காப்பாற்ற முயற்சித்தாரா என ஆய்வு செய்து வருவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு குறைந்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தங்கமணி யாரையேனும் காப்பாற்ற முயற்சித்தாரா என ஆய்வு செய்து வருவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    தொழில்முனைவோருக்கான கலந்தாய்வு கூட்டம் கரூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தை, எட்டாயிரம் கோடி ரூபாயில் இருந்து 25 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

    Also Read : கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரண்டு லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு குறைந்தது தொடர்பாக விளக்கமளித்த செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியே தவறு செய்தாரா என்று வினவியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தவறு செய்தது யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: DMK, Senthil Balaji

    அடுத்த செய்தி