• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை பாயும் - முதல்வர் ஸ்டாலின் உறுதி

தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை பாயும் - முதல்வர் ஸ்டாலின் உறுதி

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் மழை மீட்பு பணிகள் முடிந்த பின் தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததார் மீது நடடிவக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து  பெய்த கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அவதியடைந்துள்ளனர்.

    கனமழையினால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு பணியார்கள் மீட்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது நாளாக இன்றும் ஆய்வும் செய்தார். கொளத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அவர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தும் ஆய்வு செய்தார்.

    அப்போது செய்தியாளர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள், மீட்பு பணிகள் உள்ளிட்டவை துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றுள்ளார். மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் ஊழல் நடந்துள்ளது. பணிகள் முறையாக நடைபெறாமல் உள்ளதால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மழை மீட்பு பணிகள் முடிந்த பின் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: