ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்.. திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்.. திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்ற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அதிகாரத்தில் உள்ள திமுகவினர் சொல்லிலும் செயலிலும் அலட்சியம் இல்லாமல் கவனமாக செயல்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தவறிழைப்போர் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

  இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு  முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், திமுக தலைவர் பதவிக்கு அக்டோபர் 7ம் தேதி தான் வேட்புமனுவை தாக்கல் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.   மேலும்,2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் பங்களிப்பை இந்தியாவே எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

  சொன்ன திட்டங்கள் மட்டுமின்றி, சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் எனப் புதிய புதிய முற்போக்குத் திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வருவதாகவும் கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் நிரம்பிய திமுக ஆட்சியால் மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.  என்றும் அதற்குத் தடங்கலாகும் சூழலைத் திட்டமிட்டு உருவாக்க சில அரசியல் கட்சிகள் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: தமிழ் நிகழ்ச்சிகள் நேரம் குறைப்பு... வானொலி மூலம் மத்திய அரசு இந்தியை திணிப்பது நியாயமற்றது- ராமதாஸ்

  அரசுப் பொறுப்பில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்குடன் செயல்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர்

  உடல்மொழி மற்றும் நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  தவறிழைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டுவதாகவும் கூறியுள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: CM MK Stalin, DMK