Home /News /tamil-nadu /

தமிழகம் முழுவதும் 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது

தமிழகம் முழுவதும் 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது

Youtube Video

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ரவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் கடந்த 36 மணி நேரத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க டிஜிபி சைலேந்திரபாபு காவல் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி Storming ஆப்ரேசன் என்ற பெயரில் நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் கொலை மற்றும் குற்றவழக்கு பதிவேட்டில் உள்ள 16,370 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கத்திகள் உட்பட 934 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ரவுடிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை தொடரும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Police, Rowdies

    அடுத்த செய்தி