Home /News /tamil-nadu /

பெண் மீது ஆசிட் வீசிவிட்டு சாமியார் வேடத்தில் தலைமறைவு.. தப்ப முயன்றபோது போலீஸ் துப்பாக்கிச்சூடு

பெண் மீது ஆசிட் வீசிவிட்டு சாமியார் வேடத்தில் தலைமறைவு.. தப்ப முயன்றபோது போலீஸ் துப்பாக்கிச்சூடு

நாகேஷ்

நாகேஷ்

தனது காதலை ஏற்றுக்கொள்ளாத இளம்பெண் மீது கடந்த மாதம் 28-ம் தேதி பையில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை வீசிய நாகேஷ் தலைமறைவாகியுள்ளார்.

  • News18
  • Last Updated :
    பெங்களூருவில் காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிவிட்டு, திருவண்ணாமலையில் சாமியார் வேடமணிந்து மறைந்திருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். மேலும், பெங்களூரு அழைத்துச் செல்ல முயன்றபோது, தப்ப முயன்ற நபர் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள சுகாந்தகட்டே (Sunkadakatte) என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நாகேஷ் ஒரு தலையாக காதலித்துள்ளார். அந்த இளம்பெண்ணை அவரது அலுவலகத்திற்கு சென்றும், அவரது வீட்டிற்கு சென்றும் அடிக்கடி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நாகேஷ் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் முகத்தில் ஆசிட் அடித்து விடுவேன் என்று மிரட்டியதுடன் நாகேஷ் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். நாகேஷின் காதலை ஏற்றுக்கொள்ளாத இளம்பெண் மீது கடந்த மாதம் 28-ம் தேதி பையில் மறைத்து வைத்திருந்த ஆசிட் வீசிய நாகேஷ் தலைமறைவாகியுள்ளார்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த பெங்களூரு போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து நாகேஷை தீவிரமாக தேடி வந்தனர். நாகேஷின் நண்பர்கள், குடும்பத்தாரின் தொலைப்பேசி அழைப்புகளை கண்காணித்த போலீசாருக்கு, திருவண்ணாமலையில் நாகேஷ் பதுங்கியுள்ளது தெரியவந்தது.

    ஆனால், ரகசியமாக பயன்படுத்திவந்த செல்போனை நாகேஷ் சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்ததால் திருவண்ணமலைக்கு வந்த பெங்களூரு போலீசாரால் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

    அதனால், நாகேஷின் புகைப்படம் அடங்கிய தகவல்கள்  தேடப்படும் குற்றவாளி என்ற நோட்டீஸ் திருவண்ணாமலை நகரம், கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஒட்டியுள்ளனர்.

    கிரிவலப்பாதையில் உள்ள தனியார் ஆசிரமத்திற்கு குற்றவாளி அடிக்கடி தியானத்திற்கு வருவதாக கிடைத்த ரகசிய தகவல் தனிப்படைக்கு கிடைத்துள்ளது.

    ஆனால், அந்த நபர் நாகேஷ் தானா என்பதை போலீசார் உறுதிபடுத்த விரும்பினர். அப்படி உறுதியானால், அவரை கையும் களவுமாக சுற்றி வளைத்து கைது செய்யவும் திட்டமிட்டனர். பக்தர்கள் போல மாற்று உடையில் தியான மண்டபத்திற்குள் நுழைந்த போலீசார், அங்கு காவி வேடம் அணிந்து தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்து நாகேஷ்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

    திடீரென நாகேசை சுற்றிவளைத்த போலீசார் சாமியார் வேடத்திலிருந்தவரை கைது செய்தனர். ஆனால், நாகேஷ் தப்பியோடமுயற்சித்துள்ளார். அதனால், நாகேஷின் கைகளை ஜன்னலில் வளைத்து போலீசார் கட்டியுள்ளர்.

    திருவண்ணாமலை நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, நாகேஷை பெங்களூருவுக்கு தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த ரகசிய கைது சம்பவம் ஆசிரமவாசிகளை மட்டுமன்றி கிரிவலபாதையில் வசித்துவருபவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    Also read... கமலின் ‘பாபநாசம்’ பட ஸ்டைலில் இளைஞர் கொன்று புதைப்பு.. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்..

    இந்நிலையில், ஜீப் மூலம் நாகேஷ் பெங்களூரு அழைத்து செல்லப்பட்டார். கெங்கேரி மேம்பாலம் பகுதியில் செல்லும் போது அவர் கழிவறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.  இதையேற்று போலீசார் நாகேஷை வாகனத்தில் இருந்து இறக்கி விட்டபோது, கீழே இருந்த கற்களை எடுத்து போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்பிக்க முயன்றுள்ளார்.

    இதையடுத்து காவல் ஆய்வாளர் பிரசாந்த் துப்பாக்கியால் சுட்டதில், அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது. தொடர்ந்து, நாகேஷும், அவர் தாக்கியதில் காயமடைந்த காவலர் மஹாதேவைய்யா-வும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    -செய்தியாளர்: சதீஷ்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Thiruvannamalai

    அடுத்த செய்தி