தமிழ் மீது கொண்ட ஈர்ப்பால் கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட இளைஞர் சிறிய குச்சியில் 1330 குறள்களை எழுதி சாதனை

சிறிய குச்சியில் 1330 குறள்களை எழுதி சாதனை...

தனது கனவரின் முயற்சிக்கு பக்க பலமாக இருந்த லூகாஸ் மனைவி இதை செய்து முடிக்க 2 மாதங்கள் ஆனதாக கூறுகிறார்.

 • Share this:
  தமிழர் திருநாளின் இரண்டாம் நாளான இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது, திருவள்ளுவரை போற்றும் வகையில் ஓசூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட போதிலும் தமிழ் மீது கொண்ட ஈர்ப்பால் சிறிய குச்சியில் 1330 குறள்களை எழுதி சாதனை செய்துள்ளார்.

  ஆங்கில மோகம், பிற மொழி ஆதிக்கம் நகரமயமாகும் கலச்சாரங்களால் தமிழ் இனி மெல்ல சாகும் என மொழியார்வளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால் இது போன்ற இளைஞர்களின் சாதனைகள் தமிழ் இனிதான் மெல்ல வளரும் என்பதை உணர்த்துகிறது.

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெத்த எலசகிரி கிராமத்தை சேர்ந்தவர் லூகாஸ். கர்நாடக எல்லையை ஒட்டிய பகுதி என்பதால் லூகாஸ் படித்தது வளர்ந்து எல்லாம் கன்னடத்தில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் திருக்குறளை படித்துள்ளார்.

  லூகாஸ். அதன் மீது கொண்ட ஆர்வத்தால் ஆங்கிலத்திலேயே 1330 மொழிமாற்றம் செய்து திருக்குறளை புத்தகமாக வெளியிட்டுள்ளார். பிறகு திருவள்ளுவர் மீது அளவற்ற பற்று கொண்ட அவர் திருவள்ளுவரின் திருவுருவ நாணயங்களை சேகரிக்க தொடங்கினார்.  அதன்பிறகு தெய்வப்புலவரின் இருவரிக்கவிதையை தமிழில் படிக்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டு விடா முயற்சியுடன் தமிழ் எழுத படிக்க கற்றுதேற்ந்துள்ளார் லூகாஸ், 1330 குறள்களையும் படித்து முடித்த லூகாஸ், திருவள்ளுவர் தினத்தன்று வித்தியாசமான முறையில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என உத்தேசித்து சிறிய ஐஸ் குச்சியில் 1330 குறள்களை எழுதி ஒவ்வொரு குறளிலும் எத்தனை எழுத்துக்கள் உள்ளது என்பதையும் பதிவு செய்து ஒரு அதிகாரத்திற்கு 10 குறள் என 133 அதிகாரம் கட்டுக்களை கட்டி 1330 குறள்களை தனது மனைவியுடன் இணைந்து எழுதி ஆச்சரியபடுத்தியுள்ளார்.

  தனது கனவரின் முயற்சிக்கு பக்க பலமாக இருந்த லூகாஸ் மனைவி இதை செய்து முடிக்க 2 மாதங்கள் ஆனதாக கூறுகிறார்.

  மேலும் படிக்க...தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

  தெய்வப்புலவரின் இருவரிக்கவிதை தமிழ் தெரியாத இளைஞனையும் தன்வசப்படுத்தி தமிழ் கற்க வைத்து ஆதி மொழியின் சிறப்பை உணர்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: