தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் இதுவரை 51,208 பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த துறையின் முதன்மை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், மாதவரம், பூவிந்தவல்லி, கே.கே.நகர் ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 24 முதல் 26 வரை தினசரி இயங்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,265 பேருந்துகள் என 3 நாட்களுக்கு 10,940 பேருந்துகள் இயக்கபட உள்ளன.
www.tnstc.in, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.in இணையதளங்களில் இதற்கான முன்பதிவுகளை செய்துகொள்ளலாம்.
இதுவரை 51,208 பேர் முன்பதிவு செய்துள்ளதன் மூலம் அரசுக்கு 2.55 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.