ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

India Today : அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் - இந்தியா டுடே விருது

India Today : அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் - இந்தியா டுடே விருது

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழகத்திற்கு அடுத்தபடியாக இமாச்சல பிரதேசம் மாநிலம் இரண்டாம் இடத்திலும் பஞ்சாப் மாநிலம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டு மொத்த துறைகளில் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியா டுடே இதழ் ஆண்டுதோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது வரும் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விருது பெற்றவர்களின் பட்டியலை அந்த நாளிதழ் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.

Also read... Gold Rate | சவரனுக்கு ₹296‌ குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

தமிழகத்திற்கு அடுத்தபடியாக இமாச்சல பிரதேசம் மாநிலம் இரண்டாம் இடத்திலும் பஞ்சாப் மாநிலம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. நீர் மேலாண்மை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கான கடிதத்தை இந்தியா டுடே இதழ் நிர்வாகம் தமிழக முதல்வருக்கு கடிதமாக தெரிவித்துள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Tamilnadu govt