தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போய் கொண்டிருக்கிறது: தமிழிசை

தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும், அதற்கு தமிழகத்தில் இருக்கும் கூட்டணி கட்சிகளும் வழி முறை செய்ய வேண்டும் என்று தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார்.

தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போய் கொண்டிருக்கிறது: தமிழிசை
தமிழிசை செளந்தரராஜன்
  • News18
  • Last Updated: July 10, 2019, 10:52 AM IST
  • Share this:
தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போய் கொண்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளார்களை சந்தித்த அவரிடம், பாஜக குறித்து நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் வெளியாகியுள்ள கருத்து குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்தார், “ எம்ஜிஆர் நாளேட்டில் இடம் பெறுவதற்கு எல்லாம் பதில் கூற விரும்பவில்லை. அவர்கள் கட்சி இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போய் கொண்டிருக்கிறது”என்று விமர்சனம் செய்தார்.

காவிரி நதிநீர் ஆணையம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ யாராக இருந்தாலும் காவிரி நதிநீர் ஆணையத்தின் கட்டளைப்படி தண்ணீர் திறந்து விட்டுதான் ஆக வேண்டும்.  இதில் எந்தவித அரசியலும் தலையிடக்கூடாது. குமாரசாமி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று சொல்வது ஆரோக்கியமான ஒரு சூழல்தான். ஆனால் ஒரு புறம் குமாரசாமி தனது பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் பேசுகிறாரா என்பது தெரியவில்லை” என்றார்.


அதனைத் தொடர்ந்து பேசிய அவர், தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் இருக்கும் கூட்டணி கட்சிகளும் வழி முறை செய்ய வேண்டும் ” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும்... தர்காவில் தலைவிரிகோலத்தில் நிர்மலாதேவி...அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading