காரில் ஏறி விளையாடிய சிறுமிகள்: கதவு மூடியதால் மூச்சு திணறி மரணம் - கள்ளக்குறிச்சியில் சோகம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காரில் ஏறி விளையாடிய சிறுமிகள் கதவு அடைத்துக் கொண்டதால் மூச்சு முட்டி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரில் ஏறி விளையாடிய சிறுமிகள்: கதவு மூடியதால் மூச்சு திணறி மரணம் - கள்ளக்குறிச்சியில் சோகம்
மாதிரிப் படம்
  • Share this:
கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீபமங்கலம் உள்ள பாரதியார் தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவருக்கு சொந்தமான மாருதி ஷிப்ட் கார் ஒன்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதே தெருவை சேர்ந்த அய்யனார் மகள் வனிதா வயது 3. ஏழுமலை என்பவரது மகன் ராஜி வயது 7.

இருவரும் இன்று மாலை காரில் ஏறி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் மூடியதால் சிறுமிகள் இருவரும் வெளியே வர முடியாமல் காரிலேயே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளனர். இதனால் மூச்சுத் திணறி சிறுமிகள் இருவரும் காரிலேயே உயிரிழந்துள்ளனர்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காரை உடைத்து குழந்தைகளை வெளியே எடுத்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இரு சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காரில் சிக்கி இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குலதீபமங்கலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மணலூர்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading