திருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு

news18
Updated: August 18, 2019, 11:29 PM IST
திருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு
விபத்து நடந்த இடம்
news18
Updated: August 18, 2019, 11:29 PM IST
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இன்று பிற்பகலில் சாலையோரம் இருந்த கிணற்றில், டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்து எரகுடியிலிருந்து திருமானூர் செல்லும் சாலையோர வளைவின் ஓரத்தில் பாழடைந்த தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகலில் வளைவில் திரும்பிய டாடா ஏஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் பாய்ந்தது. வாகனத்தில் இருந்த 17 பேர் 30 அடி ஆழ கிணற்றில் விழுந்தனர்.


தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 8 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

17 பேரும் டாடா ஏஸ் வாகனத்தில் கோவில் திருவிழாவுக்குச் சென்று திரும்பியவர்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் மற்றும் விவரம்:

Loading...

1. குணசீலன் 72 பேரூர்
2. கயல்விழி 27 கட்டப்பள்ளி
3 . கோமதி 40 பேரூர்
4. சரண்குமார் 6 பேரூர்
5. யமுனா 10 பேரூர்
6. எழிலரசி 60 பேரூர்
7. சஞ்சனா 2 கட்டப்பள்ளி
8. குமராத்தி 50 பேரூர்.

படுகாயமடைந்தவர்கள் விவரம்:

1. லாவண்யா 13 பேரூர்
2. ரோசிகா 13 பேரூர்
3. முத்துகண்ணு 42 பேரூர்
4. இளங்கோவன் 46 பேரூர்
5. சரஸ்வதி 46 கட்டப்பள்ளி
6. ஹரீஸ் 5 கட்டப்பள்ளி
7. சுகந்தன் 11 பேரூர்
8. இளையராஜா 32 டிரைவர் பேரூர்
9. பூங்கொடி
First published: August 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...