ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அ.தி.மு.க கூட்டணியில் 5 தொகுதி கேட்டுள்ளோம் - பேச்சுவார்த்தைப் பிறகு ஏ.சி.சண்முகம் தகவல்

அ.தி.மு.க கூட்டணியில் 5 தொகுதி கேட்டுள்ளோம் - பேச்சுவார்த்தைப் பிறகு ஏ.சி.சண்முகம் தகவல்

ஏசி சண்முகம்

ஏசி சண்முகம்

புதிய நீதி கட்சி சார்பில் அ.தி.மு.கவுடனான முதற்கட்ட கூட்டனி பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், இரட்டை இல்லை சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதாகவும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சன்முகம் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு செய்வதில் தீவிரம் காட்டிவருகின்றன. தி.மு.க கூட்டணியைப் பொறுத்துவரையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், ம.தி.மு.க, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்தை நடைபெற்றுவருகிறது.

  அதேபோல, அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பா.ம.கவுக்கு 23 தொகுதிகளும் பா.ஜ.கவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸில் அ.தி.மு.கவுடன் புதிய நீதி கட்சி கூட்டனி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

  அதேபோல் புதிய நீதி கட்சி சார்பில் கட்சியின் மாநில தலைவர் ஏ.சி.சன்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சன்முகம் 5 தொகுதிகளை கேட்டுள்தாகவும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுவதாக தெரிவித்தார். இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: ADMK, Election 2021, New justice party