Home /News /tamil-nadu /

கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை விடுதலை செய்யாவிட்டால் முதல்வர் வீட்டை மீண்டும் முற்றுகையிடுவோம்- ஏ.பி.வி.பி எச்சரிக்கை

கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை விடுதலை செய்யாவிட்டால் முதல்வர் வீட்டை மீண்டும் முற்றுகையிடுவோம்- ஏ.பி.வி.பி எச்சரிக்கை

ஏபிவிபி போராட்டம்

ஏபிவிபி போராட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை மீண்டும் முற்றுகையிடுவோம் என்று ஏ.பி.வி.பி அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

    சென்னையில் கைது செய்யப்பட்ட ஏ.பி.வி.பி நிர்வாகிகளை விடுதலை செய்யவில்லையென்றால் மீண்டும் முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம் என்று ஏ.பி.வி.பி மாநில நிர்வாகிகள்தெரிவிதுள்ளனர்.

    தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள கிறிஸ்துவ பள்ளியில் படித்த அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். அந்த மாணவி கட்டாய மதமாற்றம் செய்ததுதான் தற்கொலைக்கு காரணம் என்று பா.ஜ.க தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. இந்த விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி கையில் எடுத்துள்ளது.

    இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தை முற்றுகையிட்டு ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் கைது செய்த 29 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை பிப்ரவரி 28-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
    இந்தநிலையில், சென்னையில் ஏபிவிபி மாநில நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பேசிய அவர்கள், ‘லாவண்யா மரணம் தொடர்பாக நீதிகேட்டு முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஏ.பி விபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் முதல்வரை சந்தித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம்... விவசாயிகள் போராட்டம் - வன்முறை வழக்கில் கைதானவர்

    மேலும் லாவண்யா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் எந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஏ.பி.வி.பி குரல் கொடுக்கும். இந்த விஷயத்தில் எந்த வித அரசியல் உள்நோக்கம் இல்லை. சென்னையில் அனுமதிக்கப்பட்ட மற்ற இடங்களில் போராட்டம் நடத்தினால் முதல்வருக்கு தெரியவாய்ப்பில்லை. எனவே முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டோம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியான விடுதலை செய்ய வேண்டும். மறுக்கும் பட்சத்தில் மீண்டும் முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம் எனவும் தெரிவித்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: ABVP

    அடுத்த செய்தி