• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆயுட்காலம் முடிந்தும் கூட இயங்கும் அனல் மின் நிலையங்கள் - தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு என ஆய்வறிக்கையில் தகவல்

ஆயுட்காலம் முடிந்தும் கூட இயங்கும் அனல் மின் நிலையங்கள் - தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு என ஆய்வறிக்கையில் தகவல்

எண்ணூர் அனல்மின் நிலையம் (கோப்புப்படம்)

எண்ணூர் அனல்மின் நிலையம் (கோப்புப்படம்)

”சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கெட்டிற்கு பொதுமக்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்”

  • Share this:
    மாசுத் தடுப்புக் கருவிகள் பொருத்தாமலும், ஆயுட்காலம் முடிந்த பின்னரும் கூட அனல் மின் நிலையங்கள் இயங்கி வருவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்கிற அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் 56 சதவிகிதம் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின் நிலையங்களிலிருந்து பெறப்படுகிறது. மின்சாரத்திற்காக நிலக்கரியை எரிக்கும்போது அனல்மின் நிலையங்களிலிருந்து சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் நுண்துகள்கள் வெளியாகின்றன.

    2015-ம் ஆண்டிற்கு முன்புவரை ஒவ்வொரு அனல் மின் நிலையமும் வெளியிடும் மாசுபாடு குறித்து எந்த அளவீடுகளும் இல்லாதா நிலையில் 2015-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி இந்தியா முழுவதும் செயல்படுகின்ற அனல்மின் நிலையங்கள் 2017-ம் ஆண்டுக்குள் மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கால நிர்ணயம் செய்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

    ஆனால், 2017-ம் ஆண்டிற்குள் இப்பணிகளை மேற்கொள்ள முடியாததால் 2022-க்குள் முடிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளத. இதன்படி டிசம்பர் 31, 2003-ம் ஆண்டிற்கு முன் அமைக்கப்பட்ட உலைகளுக்கு PM எனப்படும் நுண்துகளின் அளவு, 100-க்கு மிகாமலும், சல்பர் டை ஆக்சைடானது 500 மெகாவாட்டிற்கு குறைவான உலைகளில் 600-ம், 500 மெகாவாட்டிற்கு குறைவான உலைகளில் 200-ம், நைட்ரஜன் ஆக்சைடு 600-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    2004-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்ட உலைகளும் நுண்துகள் அளவு 50, சல்பர் டை ஆக்சைடு 500 மெகாவாட்டிற்கு குறைவான உலைகளில் 600-ம், 500 மெகாவாட்டிற்கு அதிகமான உலைகளில் 200-ம், நைட்ரஜன் ஆக்சைடு 300-ம் இருக்கிறது.

    ஜனவரி 1,2017-ம் ஆண்டிற்கு பிறகு நிறுவப்பட்ட அனல்மின் நிலையங்களுக்கு நுண்துகள் அளவு சல்பர் டை ஆக்சைடின் அளவு 100, நைட்ரஜன் ஆக்சைடின் அளவு 100 இருக்கும்படியாக மாசுத் தடுப்புக் கருவிகளை அமைக்க வேண்டும்.

    இந்த நிலையில், டெல்லியில் செயல்பட்டும் வரும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்கிற அமைப்பு இந்தியா முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் மாசுபாட்டை குறைப்பதற்காக நடைபெற்றும் வரும் பணிகளின் தற்போது நிலை குறித்த விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இந்த அறிக்கையின்படி இந்தியா முழுவதும் உள்ள 41 அனல்மின் நிலையங்கள் மாசுத் தடுப்பு மேம்பாட்டு கருவிகள் பொறுத்துவதற்கான திட்டத்தைக் கூட இன்னும் தயாரிக்காமல் உள்ளனர். இந்த பட்டியலில் என்.எல்.சி.யின் முதல் அனல்மின் நிலையத்தின் 9 அலகுகளும், வடசென்னை அனல்மின் நிலையத்தின் 4 மற்றும் 5-ம் அலகுகளும் அடங்கும்.

    மேலும் ஏற்கெனவே ஆயுட்காலம் முடிந்த 3,410 மெகாவட் உற்பத்தித் திறன் கொண்ட 8 அனல்மின் நிலையங்கள் தற்போது இயங்கி வருவதாகவும் அதில் மேட்டூர் அனல்மின் நிலையமும், நெய்வேலி அனல் மின் நிலையமும் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

    இதே நிலை தொடர்ந்தால் 2022-ம் ஆண்டிற்கு இந்தியா முழுவதும் உள்ள அனல்மின் நிலையங்கள் அனைத்தும் மாசுத் தடுப்பு மேம்பாட்டு கருவிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாது என்றும், இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கெட்டிற்கு பொதுமக்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: