கோவை அத்திபாளையம் சித்தாபுதூர் பகுதியில் டெய்லி-மேக்ஸ் என்ற பெயரில் ஆன்லைன் ட்ரேடிங் நிறுவனம் நடத்தி வந்தவர் செந்தில்குமார். காரமடை பகுதியைச் சேரந்த இவர் நடத்திய ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக 1 லட்சம் செலுத்தினால் 100 நாட்களில் 2 லட்சமாக திருப்பித் தரப்படும் எனவும், 1 லட்ச ரூபாய் செலுத்தினால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி வழங்குவதுடன், வருடத்தின் முடிவில் 2 லட்சமாக பணம் திருப்பிக் கொடுக்கப்படும் எனவும் கூறி வாடிக்கையாளர்களிடம் முதலீடு பெற்றுள்ளார்.
கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தில் சுமார் 7 லட்சம் ரூபாய் பணம் செலுத்திய நிலையில் பணம் திரும்ப கிடைக்காததால் பொருளாதார குற்றபிரிவு காவல் துறையில் புகாரளித்தார். சரவணன் புகாரின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
Also read: ஒட்டுண்ணி குளவி மூலம் கவரப்பட்டு வடிவமைக்கப்பட்ட டியூமர் அறுவை சிகிச்சை கருவி
விசாரணையில் கோவை, திருப்பூர், ஈரோடு,பாண்டிச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோரிடம் செந்தில்குமார் பணம் பெற்று மோசடி செய்திருப்பதும், கடந்த சில மாதங்களாக நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாக இருந்து வருவதும் தெரியவந்தது. சரவணன் புகாரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்த செந்தில்குமாரைக் கைது செய்தனர்.
இவரிடம் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த மற்றவர்களும் பொருளாதார குற்றபிரிவு காவல் துறையில் புகாரளித்து வருகின்றனர். 1500 பேருக்கு மேலாக சுமார் 20 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்திருக்கலாம் எனவும் , பாதிக்கப்பட்டவர்களிடம் புகார்கள் பெற்று வருவதாகவும் பொருளாதார குற்றபிரிவு காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், கைது செய்யப்பட்ட செந்தில்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime | குற்றச் செய்திகள், Trade