ஓணம் பண்டிகையின்போது கிடைக்கும் வருமானத்தில் 80% வீழ்ச்சி - பின்னலாடை வணிகர்கள் வேதனை

ஓணம் பண்டிகை சமயத்தில் கிடைக்கும் வருமானத்தில் சுமார் 80 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பின்னலாடை வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஓணம் பண்டிகையின்போது கிடைக்கும் வருமானத்தில் 80% வீழ்ச்சி - பின்னலாடை வணிகர்கள் வேதனை
ஓணம் பண்டிகையின்போது கிடைக்கும் வருமானத்தில் இந்த ஆண்டு சுமார் 80 சதவீதம் வீழ்ச்சி - பின்னலாடை வணிகர்கள் வேதனை
  • Share this:
பின்னலாடை நகரான திருப்பூரில் காதர் பேட்டை பகுதி உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்தின் முக்கியப் பகுதியாகத் திகழ்கிறது. காதர்பேட்டை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பின்னலாடை வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பின்னலாடைகள் அனுப்பப்படுகின்றன.

அங்கே ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வர்த்தகம் நடைபெறும். கேரள மாநிலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, 100 கோடி ரூபாய் அளவில் பின்னலாடை வர்த்தகம் நடைபெறும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

Also read: அரியர் தேர்வுகள் ரத்து காரணமாக 2 லட்சம் தகுதியற்ற பொறியாளர்கள் உருவாக நேரிடும் - வல்லுநர்கள் எச்சரிக்கை


ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கேரள வியாபாரிகள் வருகை இல்லாதது மற்றும் பொதுமக்களின் நுகர்வுத் திறன் குறைந்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் 80 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டு, வெறும் 20 சதவீதம் அளவிற்குத் தான் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வர்த்தகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும் இதே நிலை நீடித்தால் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயச் சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் பொதுப் போக்குவரத்து தொடங்கினால் மட்டுமே உள்நாட்டு வர்த்தகம் சிறக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
First published: August 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading