தமிழகத்தில் முதல் நாளில் சுமார் 16000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்...!

தமிழகத்தில் முதல் நாளில் சுமார் 16000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்...!

மாதிரி படம்

தமிழகத்தில் இது வரை சுமார் 4.5 லட்சம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தங்கள் தரவுகளை மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி சுமார் 16000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனவரி 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. தமிழகத்துக்கு இது வரை 5,36,500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளும் 20,000 கோவாக்சின் தடுப்பு மருந்துகளும் வந்துள்ளன. இதில் 5,12,200 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. மாநிலத்தில் ஆறு மையங்களில் கோவாக்சின் தடுப்பு மருந்து போட திட்டமிடப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பு மருந்து இன்று இரவு மற்ற ஊர்களுக்கு அனுப்பப்படும்.

தமிழகத்தில் முதல் நாள் சுமார் 160 தடுப்பூசி மையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி மையங்கள் செயல்பாட்டுக்கு வரும். இந்த மையங்களில் அந்தந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் 100 சுகாதார பணியாளர்கள் முதல் நாள் தடுப்பூசியை போட்டுக் கொள்வார்கள்.

ஜனவரி 16-ம் தேதி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் தடுப்பூசி செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார். அந்த வீடியோ கான்பிரன்ஸ் -ல் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை இடம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இது வரை சுமார் 4.5 லட்சம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தங்கள் தரவுகளை மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

Also read... 20,000 கோவாக்சின் தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்தன...!

கோவிஷீல்டு கோவாக்சின் என்று இரண்டு தடுப்பு மருந்துகள் இருந்தாலும் முதல் முறை எந்த தடுப்பூசி போட்டுக் கொள்ளப்பட்டதோ 28 நாட்கள் பிறகு அதே தடுப்பூசி தான் போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாவது டோஸ் போட்டு 14 நாட்கள் கழித்தே எதிர்ப்பு சக்தி உருவாகும். முதல் முறை எந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வது என்று போட்டுக் கொள்பவர் தேர்ந்தெடுக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதல் நாளில் ராணுவ வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. எத்தனை பேருக்கு எத்தனை மையங்களில் என்ற விவரத்தை மத்திய அரசு முடிவு செய்து மாநில அரசுக்கு வழங்கும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: