தமிழகத்தில் 2021 ஏப்ரல் முதல் 2022 மே வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,01,332 மருத்துவ ரீதியிலான 20 வார காலம் உள்ள கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கருக்கலைப்பு தாய்மார்களின் உடல்சார் உரிமை (Roe v Wade) இல்லை என்று அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மத்தியிலும், 2021ம் வருட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்தச் சட்ட செயலாக்கம் அடிப்படையிலும் இந்த தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
முன்னதாக, தாய்மார்களுக்கு கருக்கலைப்பு சேவைகள் எளிதில் கிடைப்பதை அதிகரிக்கும் விதமாக மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, பாலியல் வன்கொடுமை, சிறார், குறைபாடுள்ள சிசு போன்ற சிறப்புப் பிரிவு மகளிருக்கு கருகலைப்பின் கால உச்சவரம்பை 20 வாரத்திலிருந்து 24 வாரமாக உயர்த்தியது.
மேலும், 20 வார காலம் உள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோர் ஒருவரின் கருத்து தேவை போதுமானது என்றும், 20 முதல் 24 வாரம் வரையுள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோரில் இருவரின் கருத்து தேவை என்றும் 1971 வருட சட்டத்தில் திருத்தம் செய்தது.
கால உச்சவரம்பு |
நிபந்தனைகள்
|
|
1971 வருட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டம் |
திருத்தச் சட்டம் |
12 வாரம் வரை |
கரு வளர்வதால் தாய்மாரின் உடலுக்கு ஆபத்து ஏற்படும் (அ) பிறக்கும் சிசு உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக பாதுகாப்பற்ற தன்மையில் இருக்கும் என்று சேவை வழங்குவோர் ஒருவரின் கருத்து தேவை |
சேவை வழங்குவோர் ஒருவரின் கருத்து தேவை |
12 முதல் 20 வாரம் வரை |
சேவை வழங்குவோர் இருவரின் கருத்து தேவை |
சேவை வழங்குவோர் ஒருவரின் கருத்து தேவை |
20 முதல் 24 வாரம் வரை |
அனுமதியில்லை |
பாலியல் வன்முறையில் பிழைத்தவர்கள், தகாத உறவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பெண்கள், சிறுமியர் போன்ற சிறப்புப் பிரிவு பெண்களுக்கு சேவை வழங்குவோர் இருவரின் கருத்து தேவை
|
24 வாரத்திற்கு மேல் |
அனுமதி இல்லை |
மருத்துவ வாரியம் நோய் அறியும் சோதனைகள் மூலம் கண்டுபிடித்த அதிக அளவில் இயல்பு நிலை மாறிய கருக் கலைப்பிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது |
புதிய திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் செயலாக்கம் குறித்தும், சில அடிப்படை போக்குகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
மருத்துவ ரீதியிலான கருக்கலைப்புச் சட்டம் பெண்களுக்கு அதிகாரத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது என்று எடுத்துக் கொண்டாலும், குழந்தை பாலின சமமற்ற விகிதாச்சாரத்திற்கு சட்ட வடிவம் கொடுக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது.
உதாரணமாக, பெண் சிசுக் கொலை அதிகம் நடக்கும் மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் அதிக கருக்கலைப்பு நடைபெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் 20 வார காலம் வரை உள்ள கருக்கலைப்பு - தகவல் அறியும் உரிமைச் சட்டம்
அதாவது, கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம், சேலம், ஈரோடு, மதுரை என பெண் சிசு கொலை அதிகம் நடக்கும் என அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சேலத்தில் 2022 ஏப்ரல் முதல் மே மாதத்தில் மட்டும் 1294 மருத்துவ ரீதியிலான கருக்கலைப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம் 2001-க்கும், 2011-க்கும் இடையில் குழந்தை பாலின விகிதங்கள் குறைந்து காணப்படும் மாவட்டங்களான (Decadal Decline in child sex ratio :(2001 - 2011) சென்னை, கடலூர், கோயம்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த ஓராண்டில் கருக்கலைப்பு நிகழ்வுகள் அதிகளவு நடந்துள்ளன. அதிகபட்சமாக சென்னையில் 7,435 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளனர்.

கடந்த ஓராண்டில் அனுமதிக்கப்பட்ட 20 வார காலம் வரை உள்ள கருக்கலைப்பு - தகவல் அறியும் உரிமை சட்டம்

2022 ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலான நாட்களில் - 20 முதல் 24 வாரம் வரை உள்ள சிறப்புப் பிரிவு மகளிருக்கு மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பு
எவ்வாறாயினும், தமிழகத்தில் மிக மோசமான குழந்தை பாலின விகிதத்தையும், 2001-க்கும், 2011-க்கும் இடையில் குழந்தை பாலின விகிதங்களையும் கொண்ட அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பு சம்பவங்கள் ஒப்பீட்டு அளவில் குறைந்து காணப்படுகின்றன.
|
20 வார காலம் வரை உள்ள கருக்கலைப்பு |
அரியலூர் |
1,063 |
பெரம்பலூர் |
1,261 |
கடந்த ஓராண்டில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து மறைமுகமாக தெரிந்து கொண்டு கருக்கலைப்புகள் நடைபெற்றுள்ளது என்பதை இந்த கட்டுரை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பெண் குழந்தைகள் தவர்க்கப்பட வேண்டியவர்கள் என்று கருதப்படுகிறார்கள் என்பதை பல்வேறு தரவுகள் உறுதிப்படுத்திவருகின்றன.
உதாரணமாக, ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் தயாரித்த அறிக்கையில் (Sex Ratio at
Birth in India Recent Trends and Patterns) 2011க்கு முந்தைய 7 ஆண்டுகளில் ( 2004- 11) தமிழகத்தில் பிறக்காமல் விடுபட்ட பெண் குழந்தைகளின் (Missing female children) எண்ணிக்கை 41,000 என்றும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது விடுபட்ட 0-6 வரையிலான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 59,000 ஆக இருக்கலாம் என்று மதிப்பிடுகிறது. இதில் 40,000 பெண் குழந்தைகள் கருவில் இருக்கும் போது குழந்தையின் பாலினம் குறித்த தகவலால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், 19,000 குழந்தைகள் குறைவான கவனிப்பு போன்ற காரணங்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கணக்கிடுகிறது.

2004 -2011 வரையிலான ஆண்டுகளில் நாடு முழுவதும் 26 லட்சம் பெண் குழந்தைகள் பிறக்கமால் கருவிலே தொலைக்கப்பட்டதாக unfpa ஆய்வு தெரிவிக்கிறது. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
மேலும், சமக்கல்வி இயக்கம் மற்றும் CRY, Campaign Against Sex-Selective Abortion உள்ளிட்ட அரசு சார்பற்ற அமைப்புகள் பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (PC & PNDT) சட்டத்தில் உள்ள பாரபட்சங்களை அவ்வப்போது எடுத்துரைத்து வருகின்றன.
மேலும், மத்திய அரசின் சமீபத்திய தரவுகளும், தமிழகத்தில் பாலின விகிதாச்சாரம் ஏறுமாறாக இருப்பதை தெரிவிக்கிறது. கடைசியாக மேற்கொள்ளப்பட்ட 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மாநிலத்தின் மொத்த குழந்தை பாலின விகிதாச்சாரம் 943 ஆகும். இந்திய தலைமை பதிவாளரின் மாதிரி பதிவு அமைப்பு அறிக்கையின் படி, 2017ல் குழந்தை பாலின விகிதாச்சாரம் 915 ஆகவும், தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (என்எஃப்எச்எஸ்) 5-ன் இரண்டாம் கட்ட முடிவுகளின் படி 878 ஆகவும் குறைந்துள்ளன.
|
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு |
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு |
மாதிரி பதிவு அமைப்பு |
தேசிய குடும்ப சுகாதார ஆய்வு |
2001 |
941 |
|
|
|
2011 |
|
943 |
|
|
2013-15
|
|
|
911 |
|
2014-16 |
|
|
915 |
|
2015-17 |
|
|
907 |
|
2016-18 |
|
|
908 |
|
2017-19 |
|
|
915 |
|
2019-21 |
|
|
|
878 (மிக மோசமான விகிதாச்சாரம் ) |
குறிப்பு:
இயற்கையாக 1,000 ஆண் குழந்தைகளுக்கு 950 பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் வரையறுக்கின்றனர். விகிதாச்சாரம் அதற்கு குறைவாக இருந்தால் சமூகம் ஆண் குழந்தைகளை நாடுகிறது என்று பொருள் கொள்ளப்படும்.
பெண்களுக்கான அதிகாரத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்:
கருக்கலைப்பை ஒழுக்கவியல் சார்ந்த பிரச்னையாக பார்க்க முடியாது. பெண்ணானவள் தனக்கு குழந்தை தேவையா? தேவையில்லையா என்று தீர்மானிக்கும் சுதந்திரம் பெற்றவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. 2021 சட்ட திருத்தமும் அதனையே முனைகிறது.
ஆனால், தனிப்பட்ட முறையில் தனது உடலின் மீதான சகல உரிமைகளையும் சட்டமும், சமூகமும் பெண்களுக்கு வழங்குகிறதா? என்றால் அது கேள்விக்குறிதான்.

2011 குழந்தை பாலின விகிதம். படம்: 2017 தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கை
பெண் சிசுக்கொலை என்று கூகுள் தேடுபொறியில் தட்டினால் தமிழகத்தின் நாலாபுறமும் இருந்து செய்திகள் ஓடி வருகின்றன. கருக்கலைப்பு தொடர்பான முடிவுகளில் பெண்கள் சுயாதீனமாக செயல்படுகிறார்களா? அல்லது ஆணாதிக்க பொருளியியல் அடக்குமுறை அம்சங்கள் கொண்டு முடிவுகள் எடுக்கப்படுகிறதா? கருக்கலைப்பு மூலம் மேலாதிக்க சக்திகள் தனது ஒடுக்குமுறையைத் தொடர்ந்து பேணி வருகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.
இதையும் வாசிக்க: சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்ட சம்பவம்.. கேரளா, ஆந்திராவில் விசாரணை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு
தேவையற்ற, முனையற்ற கருக்கலைப்பால் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். முழுமையடையாத கருக்கலைப்பால் அதிகமான ரத்தப்போக்கு, செப்டிக் போன்ற தீவிர பாதிப்புகள் உருவாகும். உதாரணமாக, தமிழகத்தில் 68% பெண்களுக்கு பாதுகாப்பாற்ற சேவைகள் மூலம் கருக்கலைப்பு நடைபெறுவதாக ஆய்வு ( (GUTTMACHER INSTITUTE: Abortion and Unintended Pregnancy in Six Indian States) கூறுகிறது. மேலும், தமிழகத்தில் 2015ல் ஏற்பட்ட மொத்த பிரவசங்களில் 43% (கிட்டத்தட்ட 9 லட்சம் பிரவசங்கள்) சந்தர்ப்ப வசமானவை என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, குழந்தைப் பிறப்பைத் தள்ளி போட வேண்டும் என்று விழைந்த பெற்றோர், பாதுகாப்பான, நவீன கருத்தடை சாதனை முறைகளை பின்பற்றதால் ஏற்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: பச்சிளம் சிசுக்களை தெருவில் வீசும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
எனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கருக்கலைப்பு சேவைகளை அதிகரிப்பது, மிஃப்பிரிஸ்டோன், மிசேப்ரோஸ்டல் போன்ற கருத்தரிப்பு மாத்திரைகளை சந்தையில் கிடைக்க செய்வது, குடும்ப கட்டுப்பாடு திட்டங்களில் ஆண்கள் பங்களிப்பை ஊக்குவிப்பது, கருக்கலைப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது உடனடி பணியாகத் தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.