அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு... தலைவர்கள் இரங்கல்

அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு... தலைவர்கள் இரங்கல்

அப்துல் கலாம் சகோதரர்

முகமது முத்து மீரான் மரைக்காயரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 • Share this:
  குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின், மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் நேற்று மாலை காலமானார்.

  முகமுது மீரான் மரைக்காயர் வயது மூப்பின் காரணமாக, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 104. அவருக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  முகமது முத்து மீரான் மரைக்காயரின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,
  முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் இன்று(07.03.2021) காலமான செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன் என்றுள்ளார்.  ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில், மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் Dr.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் அன்புச்சகோதரர் திரு.மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்றுள்ளார்.

  திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் அப்துல் மீரான் மரைக்காயர் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதேபோல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய மக்களின் மனங்களில் வாழும் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் சகோதரர், பெரியவர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தமடைந்தேன்.

  கலாம் அவர்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
  Published by:Vijay R
  First published: