காஞ்சிபுரத்தில் அரை நிர்வாண கோலத்தில் கைவிடப்பட்ட அமெரிக்கப் பெண்

காஞ்சிபுரத்தில் அரை நிர்வாண கோலத்தில் கைவிடப்பட்ட அமெரிக்கப் பெண்
மீட்கப்பட்ட அமெரிக்க பெண் - கேலா மரீன் நெல்சன்
  • News18
  • Last Updated: September 14, 2018, 11:17 PM IST
  • Share this:
காஞ்சிபுரத்தில் அனாதையாக கைவிடப்பட்ட அமெரிக்க பெண்மணியை அரை நிர்வாண கோலத்தில் காவல்துறையினர் மீட்டனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க கேலா மரீன் நெல்சன் என்ற பெண்மணிக்கும் சென்னை வேளச்சேரி பகுதியில் இருக்கக்கூடிய மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விமல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு நிறுவனத்திலிருந்து விமல் வேலை இழந்துள்ளார். அவருடைய மனைவியான கேலா மரீன் நெல்சன் போதைக்கு அடிமையானவர் எனவும் போலீசாரால் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் தன் மனைவியை விமல் இறக்கி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. போதையில் தேசிய நெடுஞ்சாலையில் அரை நிர்வாணத்துடன் சுற்றித்திரிந்த அமெரிக்க பெண்மணியை கண்ட அப்பகுதியினர் காஞ்சிபுரம்  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


பெண் காவலருடன் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அமெரிக்க பெண்மணியை மீட்டு அவருக்கு புதிய துணி உடுத்தி காவல்துறையினர் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

பின்னர் வேளச்சேரி காவல் நிலத்திற்கு தகவல் தெரிவித்து. சமூக நலத்துறையின் வழிகாட்டுதலின் பேரில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள லிட்டில் ஆர்ட்ஸ் எனும் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

அமெரிக்கப் பெண்மணி கொடுத்த தகவலின் பேரில் வேளச்சேரி போலீசார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று விசாரித்ததில் விமல் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காலி செய்து தற்போது தலைமறைவாக உள்ளது தெரியவந்தது.பின்னர் இதுகுறித்து அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அமெரிக்க தூதரகத்தினர் காவல்துறையினர் உதவியுடன் காப்பகத்தில் இருந்த பெண்ணை மீட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பிவைத்தனர்.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading