ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சொந்த ஊர் போறீங்களா.. கோயம்பேடு போகும் முன் இதை படிங்க!!..

சொந்த ஊர் போறீங்களா.. கோயம்பேடு போகும் முன் இதை படிங்க!!..

மாதிரி படம்

மாதிரி படம்

போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலை சமளிக்க வெளியூர் செல்வோருக்கு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக போக்குவரத்து கழகம் ஏற்பாடுகள் செய்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து  நேற்றும், இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகள் அக்டோபர் 4, 5-ம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளன. முன்னதாக அக்டோபர் 1, 2 ஆகிய நாட்கள் என தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள் நெரிசலின்றி பயணிக்கும் வகையில் நேற்றும், இன்றும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல பிற ஊர்களில் இருந்தும் 1,650 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  சிறப்பு பேருந்துகளின் விவரம்

  வழக்கமாக விழாக்காலங்களில் இயக்கப்படுவதுபோல சென்னை, கோயம்பேட்டில் இருந்து செல்லும் சில பேருந்துகளை, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும்.

  திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளின் விவரம்

  இதையும் படிங்க: 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மழை - வானிலை ஆய்வு மையம்!

  திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

  சிறப்பு பேருந்துகள்

  வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பைபாஸில் (மாநகர போக்குவரத்து கழக பூந்தமல்லி பைபாஸ் அருகில்) இருந்து இயக்கப்படும்.

  பேருந்துகள் புறப்படும் நடைமேடைகளின் விவரம்

  இதர ஊர்களுக்கு, வழக்கம்போல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். இந்த இடங்களுக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் மாநகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Koyambedu, Pooja holidays, Special buses