Home » News » Tamil-nadu » AAVINE DEVELOPMENT OFFICER SUICIDE DUE TO SUSPENDED ESR

ஆவின் வளர்ச்சித் திட்ட அதிகாரி தற்கொலை : என்ன நடந்தது..?

புகழேந்தியின் தற்கொலைக்கு காரணமான ஆவின் நிறுவன உயர் அதிகாரிகள் நால்வர் மீது நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

ஆவின் வளர்ச்சித் திட்ட அதிகாரி தற்கொலை : என்ன நடந்தது..?
ஆவின்
  • Share this:
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மதுரை ஆவின் வளர்ச்சி திட்ட அதிகாரி புகழேந்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆவின் நிறுவனத்தில் 39 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன் புகழேந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த புகழேந்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், புகழேந்தியின் தற்கொலைக்கு காரணமான ஆவின் நிறுவன உயர் அதிகாரிகள் நால்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.



 
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading