முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்... வெளியான பகீர் தகவல்கள்

ராஜேந்திர பாலாஜி

ஆவின் நிறுவனத்தில் தற்போது பணியாற்றும் ஊழல் அதிகாரிகள் அனைவரும் ராஜேந்திரபாலாஜியின் பினாமிகளாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

 • Share this:
  பச்சிளம் குழந்தைகளின் அடிப்படைத் தேவையான பால் விநிநோயகத்தில் பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  பச்சிளம் குழந்தைகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பாலின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அத்தகைய பாலை கொள்முதல் செய்வதிலும், விநியோகிப்பதிலும், அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவினில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

  இதுகுறித்து அவர் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தலைவர் வெளியிட்ட வீடியோவில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் கரைபுரண்டு ஓடியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2017-2019 ம் ஆண்டுகளில் மட்டும் 300 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பை அப்போதை நிர்வாக இயக்குநர் காமராஜ் மற்றும் முன்னாள் பால்வளைத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் ஏற்படுத்தியதாக பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  தற்போது, தனிக்கைத்துறை விசாரணையில் ஆவினில் 2019 மற்றும் 2020ம் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக புள்ளி விவரங்களுடன் 108 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் எந்த அளவுக்கு ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளது என்பது குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த முறைகேடு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு தெரியாமல் நடந்திக்க வாய்ப்பில்லை என்று பால்முகவர்கள் சங்கம் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆவின் விற்பனை பொது மேலாளர்கள் மற்றும் உதவிப் பொதுமேலாளர்கள் உள்ளிட்ட பலரும் இடைத்தரகர்ளாக இருந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், ஆவினுடைய கூட்டுறவு விதிமுறைகளை மீறி ராஜேந்திரபாலாஜிக்கு சாதகனமான 11 பேருக்கு மொத்த விநியோக உரிமையை கொடுத்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  அதன் மூலமாக மட்டும் 35 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இவற்றையெல்லாம் கண்காணிக்க வேண்டிய அப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுயலாபத்திற்காக அதிகாரிகளோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடித்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாக சந்தை நிலவரத்தை விட அதிக விலை கொடுத்து துவரம் பருப்பு கொள்முதல் செய்ய வழங்கியிருந்த டெண்டரை தற்போதைய திமுக அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை அரசுக்கு ஏற்பட இருந்த இழப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

  அதேபோல் ஆவினில் ஏற்பட்டு வரும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் தற்போது பணியாற்றும் ஊழல் அதிகாரிகள் அனைவரும் ராஜேந்திர பாலாஜியின் பினாமிகளாக செயல்பட்டு வருவதாகவும், ஊழல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வதோடு, அவர்கள் மீது விசாரணை நடத்தி சொத்துக்களை பரிமுதல் செய்ய வேண்டும் என்றம் பால்முகவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  மேலும், இடைத்தரகர் முறையை ரத்து செய்து மொத்த விநியோக முறையை தடை செய்வதுடன், பால்முகர்வகளுடன் நேரடி வர்த்தகத் தொடர்புகளை ஆவினுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொளப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: