முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய பால் வகையை அறிமுகம் செய்கிறது ஆவின்!

மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய பால் வகையை அறிமுகம் செய்கிறது ஆவின்!

ஆவின்

ஆவின்

திருநெல்வேலி மாவட்டத்தில் கொள்முதல் குறைவால் ஆவின் பால் தட்டுப்பாடு என தொடர் புகார் எழுந்ததை அடுத்து நடவடிக்கை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பால் தட்டுப்பாட்டை போக்க மார்ச் 1 ஆம் தேதி முதல் Cow Milk என்ற பெயரில் புதிய ரக பால் வகையை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

ஆவின் நிறுவனம் அந்த பாலின் கொழுப்பு அளவை 3.5 சதவிகிதமாக குறைத்து உற்பத்தி செய்யவுள்ளது. ஒரு லிட்டர் பால் 22.50 ரூபாய்க்கு விற்பனைக்கு வர உள்ளது.

பால் தட்டுப்பாடு காரணமாக பச்சை நிற பாக்கெட்டுகளை குறைக்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பச்சை நிற பாக்கெட்டுகளில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து இருக்கும் நிலையில் தட்டுப்பாடுகளை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கொள்முதல் குறைவால் ஆவின் பால் தட்டுப்பாடு என தொடர் புகார் எழுந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Aavin, Tamilnadu