ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆவின் மாதந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க அதிரடி உத்தரவு

ஆவின் மாதந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க அதிரடி உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

Aavin Milk | ஆவின் மாதந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க ஆவின் நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால்

  சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் நீலநிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆரஞ்சு பாக்கெட் பால் சில்லறை விலையில் ரூ.60, சிகப்பு பாக்கெட் பால் ரூ.76க்கும் விற்கப்படுகிறது. அதேநேரத்தில், மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூ.46 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்வதாக புகார் எழுந்ததை அடுத்து, ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்கும் பணியை ஆவின் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

  இதையும் படிங்க: மங்களூர் வெடி விபத்து: “ஈஷா மையத்தில் அவனை பார்த்தேன்” ஆட்டோ ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்

  மேலும் 27 மண்டலங்களில் இணையதளம் மூலமாக இந்த பணி நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் எனவும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Aavin